அமிழ்தம் தமிழ்ப் பள்ளி
அமிழ்தம் தமிழ்ப் பள்ளி
எம்மை பற்றி
அமிழ்தம் தமிழ்ப் பள்ளி சார்பாக தங்களை அன்புடன் இணையத்திற்க்கு வரவேற்கிறோம்!மரபு, பண்பாடு, கலாச்சாரம், வரலாறு, மொழி என்பன ஓர் இனத்தின் அடையாளங்கள் ஆகும். இவையே அவ்வினத்தின்  ஆணிவேராக அமைகின்றன.


தமிழினம் இவ்வடையாளங்களை மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகச் சுமந்து வருகின்றது.  அது மட்டுமல்லாது தமிழ் மொழியில் இருந்து எத்தனையோ மொழி பிரிந்தும் பிறந்தும் இருந்தாலும் தமிழ் என்றென்றும் இளமையாகவே இருக்கிறது.  இவற்றை, கடல் கடந்து வாழும் சூழலில் நாம் இழந்து விடக் கூடாது என்பதற்காகவும் இவற்றை நமது அடுத்த தலைமுறை அறிய வேண்டும் என்பதற்காகவும்  மான்செஸ்டர் பகுதியில், தன்னார்வலர்கள் இணைந்து   தமிழ்  பள்ளி அமைத்துக் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கப்படுகிறது.


இங்கிலாந்து சூழலுக்கு ஏற்றதாய் நம் தமிழ் சிறுவர் சிறுமியர் பேசுதல், படித்தல் மற்றும் எழுதுதல் ஆகிய திறன்களில் வலுவூட்டும் வண்ணம் பாடங்கள் வடிவமைக்கப்பட்டு தமிழ் மொழியை சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றது.


நம் குழந்தைகள் அறிவுதிறனுக்கு ஏற்றார் போலும் இங்கிலாந்து கல்வி முறை திட்டங்கள் அணுகு முறையோடும் மிக சிறந்த முறையில் கற்றுக்கொடுக்கவல்ல ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.


தமிழக அரசால் நிறுவப் பெற்ற தமிழ் கல்விக்கழகத்தின்  தொடர்பு மற்றும் தேர்வு மையமாக அமிழ்தம் அங்கீகரிகப்பட்டுளது. தமிழில் மழலைக் கல்வி முதல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முதுநிலை பட்டமும் பெறுவதற்கு அமிழ்தம் வாயிலாக உதவி புரிகிறோம்.


"கற்றலும் அதுவழி நிற்றலும், தாய்மொழி பெற்றலும் அதன்பால் பற்றை உற்றலும் இப் பரந்த உலகில் சிறப்புடையது வேறு உளதோ?" எனும் சான்றோர் வாக்கின் படி தமிழை உங்கள் குழந்தைகளுக்கு கற்பீர். அதன் புகழில் நிற்பீர்! தமிழை மதிப்போம்! அதை நாளும் துதிப்போம்!


தமிழில் ஆர்வம் கொண்ட அனைவரையும் அமிழ்தம் வரவேற்கிறது.
Amildham focuses on teaching Tamil language, literature, and culture to the children at different age groups as well as adults. Amildham is a place where teachers work voluntarily to create rich, engaged learning and teaching experiences; the centre increases student success, builds vital community partnerships, and invites individuals to become members of an intellectually diverse, active learning community. Amildham , aims at providing opportunities for the Tamil Communities living in the United Kingdom as well as others interested in learning Tamil and acquiring knowledge of the history, arts, literature and culture of the Tamils.


Amildham is a recognised Study and Test centre for Tamilnadu Government established Tamil academy.


Amildham offers academic programmes in Tamil Language, Literature and Culture for audit or credit and to award appropriate Certificate / Diploma / Degree on completion of requirement prescribed from Tamilnadu Govt., established Tamil academy.